narayana sami

புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமியை பார்த்து முதலமைச்சர் நாராயணசாமி கிண்டல் செய்துள்ளது. அரசியல் வட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

சுந்தந்திர தினத்தையொட்டி, ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு தேனீர் விருந்து அளித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஆளுநர் இன்முகத்தோடு வரவேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் நாராயண சாமியின் கைகளை பிடித்து நலம் விசாரித்து, வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

அத்தருணத்தில் ரங்கசாமியை பார்த்து உங்களுக்கு பல்லெல்லாம் இருக்கிறதா?... சட்டையில் கையை இன்னும் அதிகமாக வைத்து அணிந்து கொள்ள வேண்டியதுதானே என்று கிண்டல் செய்துள்ளார். இவ்வாறு கிண்டல் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.