ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளுடன் , 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. இதற்கான வாக்கு பதிவு நேற்று (11/04/2019) காலை 7.00 மணியளவில் தொடங்கியது. ஆனால் சுமார் 400 வாக்கு சாவடிகள் மையத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines) "EVMs" கோளாறு காரணமாக வாக்கு பதிவு நள்ளிரவு வரை நீடித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்திய வரலாற்றில் நள்ளிரவு வரை வாக்களித்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திர மக்கள் பெற்றுள்ளனர்.
இந்த நள்ளிரவு வரை நீடித்த வாக்கு பதிவு மையங்கள் நெல்லூர் , குண்டூர் , கிருஷ்ணா , கர்னூல் மாவட்டத்தை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஆந்திராவில் நடந்த தேர்தல் மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனாலும் வாக்கு பதிவுகள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி "கோபால் கிருஷ்ணா திவேதி" கூறுகையில் ஆந்திராவில் சுமார் 80% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.அதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் 150 வாக்கு சாவடி மையங்களில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என தெரிவித்தார். நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் தொடர்பான முழு விவர அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலுக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ் , சேலம் .