வெளிநாட்டில் இருந்து சாலை போக்குவரத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், டெல்லி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி, கடந்த வாரம் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 5,600 ரூபாய் மதிப்பிலான 560 கி.கி போதைப்பொருள் மற்றும் 40 கி.கி கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும், போதைப்பொருள்களை கடத்தி வந்த துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23) மற்றும் பரத் குமார் ஜெயின் (40) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தாய்லாந்தில் இருந்து சாலை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அந்த தகவலை வைத்து, அமிர்தசரஸ் மற்றும் சென்னைக்கு வந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு டெல்லியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், ரூ.2,000 கோடி மதிப்பில் விநியோகத்துக்கு தயாராகி இருந்த போதைப்பொருள்களை போலீசார் கைப்பற்றினர். 5,620 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் வீரேந்தர் பசோயாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் மட்டும் 1 வாரத்திற்குள் 7,600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.