உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 19,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#WATCH: Police personnel punish the violators of #CoronavirusLockdown in Indore. #MadhyaPradesh pic.twitter.com/XG8JxvDKS4
— ANI (@ANI) April 22, 2020
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் பொதுமக்களில் ஒருசாரார் அதனை முறையாகப் பின்பற்றாமல் வீட்டை விட்ட வெளியே வந்து சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அம்மாநில போலிசார் நூதன முறையில் தண்டனை வழங்கியுள்ளார்கள் அதன்படி, சாலையில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்த காவல்துறையினர், சாலையின் நடுவில் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு தாவிக் குதித்தல், தவளை ஓட்டம், முட்டி போடுதல், உடற்பயிற்சி செய்தல் முதலிய நூதன தண்டனைகளை வழங்கி உள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.