Poison

காதலனுடன் மனைவி சென்றதால் விரத்தி அடைந்த கணவன் தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

Advertisment

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், எலுகலபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. 37 வயதான இவருக்கு 32 வயதில் சுனைனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைகளான அவர்களுக்கு தற்போது 16 வயது ஆகிறது. இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவர் தற்போது 6ம் வகுப்பு படிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் சுனைனாவுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபருடன் சுனைனா சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் சுனைனாவை தேடி பார்த்துள்ளார் சுப்பையா.

மனைவி வாலிபர் ஒருவருடன் கூடா நட்பு ஏற்பட்டு, ஓடிவிட்டதாக பலர் கேலி செய்ததையடுத்து, 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

Advertisment

பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அந்த விஷத்தை தானும் குடித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டு உடனடியாக மதனப்பல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதுவேடு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.