/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3111.jpg)
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த மடத்தின், மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணர். இவர் மடத்தில் தங்கிப்படிக்கும் மாணவி இருவரை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும், அந்தப் பகுதியில் இயங்கிவரும் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பைத் தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த குழந்தைகளைபாதுகாப்பு நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினரின் உதவியுடன் அந்த இரு சிறுமிகளையும் அங்கிருந்து மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சித்ரதுர்கா காவல்துறையினர், மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணர், விடுதி காப்பாளர் உட்பட ஐந்து பேர் மீது போக்சோவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)