Skip to main content

“வாரணாசி கிரிக்கெட் மைதானம் ‘மகாதேவ்’க்கு அர்ப்பணிக்கப்படுகிறது” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 PM Modi proudly says Varanasi Cricket Stadium is dedicated to 'Mahadev'

 

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக 2வது முறையாக இருக்கிறார். இந்த நிலையில், வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது. 

 

இந்த நிலையில், தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்படி, வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

 

இதற்காக உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில், ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை  வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.  

 

கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகள், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக அதன் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் கிரிக்கெட் மைதானம் இது தான். இந்த மைதானத்தை கட்ட பி.சி.சி.ஐ பெரிய அளவில் பங்களித்துள்ளது. முன்னதாக டெல்லி, மும்பை, மற்றும் சென்னையில் மட்டுமே அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானங்கள் இருந்தன. இப்போது தொலைதூர இடங்களில் உள்ள வீரர்களுக்கும் இந்த வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்பு விளையாட்டு கூடுதல் செயலாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அது பள்ளிகளில் இரு கல்வியாகக் கற்பிக்கப்படும்.

 

‘மகாதேவ்’ நகரில் உள்ள இந்த சர்வதேச மைதானம், ‘மகாதேவ்’  என்பவருக்கே அர்ப்பணிக்கப்படும். வாரணாசியில் சர்வதேச மைதானம் கட்டினால் இங்குள்ள வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த மைதானம் பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் நட்சத்திரமாக மாறும். ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டு போட்டிகளில் இந்தியா கண்டுவரும் வெற்றி, விளையாட்டு மீதான பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சான்றாகும். ஒவ்வொரு நிலையிலும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேசநலனைப் பாதுகாக்க மோடியின் நிலைப்பாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்” - ரஷ்ய அதிபர் பாராட்டு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
 Russian President says I am amazed at Modi's stance to protect national interests

இந்தியா ரஷ்யாவுக்கு நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இரு நாட்டுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வந்த போதும், இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையை வகித்திருந்தது.

முன்னதாக, இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியாவை ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாராட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தேசத்தின் நலனைப் பாதுகாக்க கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பாராட்டிப் பேசியுள்ளார். 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி ஒரு வலுவான தலைவர். நாட்டுக்கான நல்லதொரு காரியத்திற்கு தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் யாரும் இல்லை. 

தேசத்தின் நலனுக்கு எதிரான முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடியை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முடியும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தேசநலனை காக்கும் விஷயத்திலும், இந்திய மக்களை காக்கும் விஷயத்திலும் சில நேரங்களில் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டை கண்டு நான் வியந்து இருக்கிறேன். மோடியை போல், என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இவர் எடுக்கும் முடிவால், இந்திய ரஷ்ய நாட்டு உறவுகள் நிலைத்தன்மை வாய்ந்ததாக மாறாமல் பலமாக உள்ளது. 

Next Story

சென்னை வந்து சேர்ந்த ராஜ்நாத் சிங்; தமிழகத்திற்கு 450 கோடி அறிவிப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajnath Singh who arrived in Chennai; 450 crore announcement for Tamil Nadu

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 07.12.2023 தற்போது டெல்லியில் இருந்து வந்தடைந்தார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

 

முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 450 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.