narendra modi

1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானைபோரில் வென்று, அந்தநாட்டின்ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்கத்தை, வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கியது. இந்தப் போரில் இந்தியா வென்ற தினம், ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவாஸ்) அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், இன்றோடு பாகிஸ்தானை இந்தியா போரில் வென்று 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Advertisment

இதனையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் வெற்றியின் 50வது ஆண்டை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் தபால் தலையை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Advertisment

மேலும், அங்குள்ளவருகைப்பதிவேட்டில், "1971ஆம் ஆண்டு போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக தலைவணங்குகிறேன். ஈடிணையற்ற வீரக் கதைகளை எழுதிய அஞ்சா நெஞ்சமுடையவீரர்களை நினைத்து குடிமக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்" என்று பிரதமர் மோடி குறிப்பெழுதி கையெழுத்திட்டார்.