pm modi offered pooja to the idol consecrated in the Ram temple

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கோவில் கருவறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Advertisment

pm modi offered pooja to the idol consecrated in the Ram temple

குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத்திறக்கப்பட்டது.