Skip to main content

ஜி-20 அமைப்பின் தலைமையை பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

PM Modi handed over the leadership of the G20 organization to Brazil

 

இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

 

நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 

 

இந்த நிலையில் இன்று ஜி 20 உச்சி மாநாட்டின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஒப்படைத்தார். கடந்த ஓராண்டாக ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
pm modi wishes rakul preet singh

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், பிரதமர் மோடி தங்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வாழ்த்து கடிதத்தில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் வாழத் தொடங்கும் ஜாக்கியும் ரகுலுக்கும் எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். தம்பதியரின் மனம் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கட்டும். எப்பொழுதும் அருகருகே இருந்துகொண்டு, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்கும் முயற்சியில் ஒருவரையொருவர் கைகோர்த்து, சிந்தனையோடும் அன்போடும் பொறுப்புகளை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தில் சரியான தம்பதிகளாக இருக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும்” - பிரதமர் மோடி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
pm modi about article 370 movie

ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி இந்தியில் இப்படம் வெளியாகவுள்ளது.  

இந்த நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தடையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. அப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400 இடங்களிலும் வெற்றிபெற உதவுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரம் சட்டப்பிரிவு 370 பற்றிய திரைப்படம் வெளியாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார்.