pm modi

இந்தியநாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்இன்று (29.01.2021) தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்தாக்கல்செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இந்தியகுடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில் பட்ஜெட்கூட்டத்தொடருக்கு வருகைதந்தபிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்சுதந்திரப் போராட்டவீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளதாகவும், இந்த தசாப்தத்தைமுழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும்பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், "இன்று இந்த தசாப்தத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்டவீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துவிட்டது. இந்த பத்தாண்டுகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த கூட்டத்தொடரில் இந்த பத்தாண்டுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும். இது தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின்குறிகோள்களை நிறைவேற்றுவதற்கான எங்கள் பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் பின்தங்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.

Advertisment

"இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 2020 ஆம் ஆண்டில்4-5 சிறியபட்ஜெட் தொகுப்புகளை வெவ்வேறு வடிவத்தில் முன்வைக்க வேண்டியிருந்தது.இந்த பட்ஜெட் அந்த 4-5 சிறிய பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படும்" எனவும்பிரதமர் மோடி தெரிவித்தார்.