18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன. மேலும் ஆந்திரா, குஜராத், காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.
இது குறித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், அசாம், பீகார், கோவா, மேகாலயா, மணிப்பூர், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. ஒடிசா பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேம்பாடு பற்றிய செயல் திட்டங்களையும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்து இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.