sabarimala

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாகபத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை நதி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது. மேலும், காக்கி - ஆனத்தோடு நீர்த்தேக்கத்திற்கும்,பம்பா அணைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

இதன்காரணமாகஇன்று (20.11.2021) சபரிமலைக்குப் பக்தர்கள் செல்ல தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்டஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வானிலை சரியானவுடன், ஆன்லைன் மூலமாக தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பத்தனம்திட்டா மாவட்டஆட்சியர் கூறியுள்ளார்.

Advertisment