பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15 ஆகக்குறைக்க மக்கள் 60 சதவீத எத்தனாலும் 40 சதவீத மின்சாரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிதெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில்பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது . அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசியபோது, “நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆற்றல் வழங்கும் நபர்களாக மாற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் தான் இனி அனைத்து வாகனங்களும் ஓடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. நாட்டில் உள்ள வாகனங்கள் 60 சதவீதம் எத்தனாலிலும் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தையும் பயன்படுத்த வேண்டும். அதன்படி செய்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும்.இதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.