Skip to main content

'பி.எம். கேர்ஸ்' நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்ககோரி வழக்கு! - மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

pm cares fund

 

கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை கடந்தாண்டு தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

 

மேலும் இந்த பிஎம் கேர்ஸ் நிதியை பொதுக் கணக்கு குழுவால் தணிக்கை செய்யமுடியாது எனக் கூறப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிதியத்திற்கு இதுவரை நிதியளித்தவர்கள் யார்? எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ பதில் வராததால், இன்று வரை பிஎம் கேர்ஸ் நிதியம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மேலும் பிஎம் கேர்ஸ் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களிலும் விசாரணை நடைபெற்றது.

 

இந்தநிலையில் பிஎம் கேர்ஸ் நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்க வேண்டும், பிஎம் கேர்ஸ் நிதியைத் தணிக்கை செய்து அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும். பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்பட நன்கொடைகள் மற்றும் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக, 10 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அமலாக்கத்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. வழக்கு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Aam Aadmi MP's case against enforcement department

 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

 

அதே சமயம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

 

இந்நிலையில் சஞ்சய் சிங் எம்.பி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.