The person who threatened  mukesh Ambani

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு நேற்று (27-10-23) மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், ‘நீங்கள் 20 கோடி ரூபாய் தரவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் நபர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தது.

Advertisment

இது குறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரியவந்தது. இது குறித்து மும்பை காம்தேவி காவல்நிலையத்தில்2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்குசெல்போன் மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.