Skip to main content

பீகார் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் மோடியின் தோற்றமுடைய நபர்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
The person who looks like Prime Minister Modi contesting the Bihar elections

 

 

பிரதமர் மோடியை போன்ற தோற்றம் உடைய ஒருவர் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

 

அபினாநந்தன் என்பவர் வஞ்சித் சமாஜ் கட்சி சார்பில், அத்துவா தொகுதியில் போட்டியிட இருக்கிறார். பிரதமர் மோடியை போன்று முகம், சிகை அலங்காரம் மற்றும் உடை ஆகியவற்றால் அந்த பகுதியில் பிரபலமடைந்த அபினாநந்தன், இதற்கு முன்பே பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை கண்ட நிலையில், “இந்த முறை தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆவதற்கான முயற்சியை மேற்கொள்வேன்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கூட்டணியைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Rahul Gandhi criticized Budget that will satisfy the coalition and save the seat

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்  மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம்  ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்; சாமானிய மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸின் தேர்தலை அறிக்கையையும், பழைய பட்ஜெட் உரையையும் வெட்டி ஒட்டி இணைத்துத் தாக்கல் செய்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஆந்திர மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்” - முதல்வர் சந்திரபாபு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
People of Andhra Pradesh have won

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில், “ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை எளிதாக்கப்படும்.  நடப்பு நிதியாண்டில், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும்  மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. 

People of Andhra Pradesh have won
கோப்புப்படம்

பீர்பைண்டியில் புதியதாக 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் உதவிக்கான பீகார் அரசின் கோரிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக பீகாருக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாநிலத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆந்திரா வெற்றி பெற்றது. ஆந்திர மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் மாநில மக்களுக்கு சேவை செய்ய பெரும் ஆணை வழங்கியதற்காக இன்று என் இதயம் நன்றியினால் நிறைந்தது. தெலுங்கு தேசம் கட்சி- ஜன சேனா கட்சி-பாஜக கூட்டணியை ஆசீர்வதித்ததற்கு நன்றி. ஒன்றாக, நாங்கள் எங்கள் மாநிலத்தை மீட்பதற்கான போரில் வெற்றி பெற்றுள்ளோம், ஒன்றாக, நாங்கள் மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். 

People of Andhra Pradesh have won

பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆந்திராவின் எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்புக்காக அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஜன சேனா கட்சியின் பவன் கல்யான், பாஜக புரந்தேஸ்வரி ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி, நமது தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாகும். கடைசி வரை அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக துணிச்சலுடன் போராடியது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்தச் சிறந்த சாதனைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் பீகாருக்கான ஒதுக்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில்,  “இதற்காக (சிறப்பு அந்தஸ்து) நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இது தொடர்பாக அவர்களிடமும் (என்டிஏ) கூறினேன். அதாவது எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள் என்று கூறினேன். அதன் தொடர்ச்சியாக, பல விஷயங்களுக்கு உதவிகளை அறிவித்து விட்டார்கள்” எனத் தெரிவித்தார்.