கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Karnataka: People in Kalaburagi defy social distancing norms as heavy crowd gathers at a vegetable market, amid #CoronavirusLockdown.
— ANI (@ANI) April 1, 2020
Total number of positive #COVID19 cases in the state is 101, including 3 deaths & 8 discharged/cured cases. pic.twitter.com/r9NZpfuBnO
இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள கல்பர்கி சந்தையில் மக்கள் காய்கறி வாங்கப் பெருங்கூட்டமாக வந்தனர். கர்நாடகாவில் கரோனா தொற்றின் காரணமாக 100-க்கும் மேற்பட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாக நின்று காய்கறி வாங்கிச் செல்கிறார்கள். கர்நாடகாவில் கரோனா வைரஸ் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.