Published on 14/03/2022 | Edited on 14/03/2022
ஆதார் அட்டையுடன் பான் கார்டு எண்ணை இணைக்க பலமுறை மத்திய அரசு கால நீட்டிப்பு கொடுத்து அவகாசம் வழங்கியிருந்தது. இந்நிலையில் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு அவகாசம் வழங்கியிருந்த நிலையில் தவறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலலை அளித்துள்ளது.