Skip to main content

விமான ஓடுதளத்தில் உணவருந்திய பயணிகள்; இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Penalty for Indigo for Passengers eating on the runway

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

லேட்டான விமானம்; ஓடுதள பாதையிலேயே ரெஸ்ட் எடுத்த பயணிகள்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Late Flight; Passengers who took rest on the runway

டெல்லில் இருந்து கோவாவிற்கு சென்ற விமானம் தாமதமாக சென்ற நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் விமானத்தின் அருகேயே கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தியதோடு,  விமான ஓடுதள பாதையின் அருகே ரெஸ்ட் எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

தாமதமான விமானம்; ஆத்திரத்தில் பயணி செய்த காரியம்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
delayed flight; What the traveler did in a fit of rage

டெல்லியில் சமீப காலமாகக் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (14-01-24) பனிமூட்டம் காரணமாக 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரத் தாமதத்துக்குப் பின்னே இயக்கப்பட்டன. மேலும், சென்னை, கேரளா, பெங்களூரிலிருந்து புறப்படும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு டெல்லியிலிருந்து கோவாவுக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் விமானம் புறப்பட 10 மணி நேரம் காலதாமதம் ஆனது. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு விமானம் புறப்படத் தயாரானது. ஆனால், அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானம் புறப்படுவதற்கு மீண்டும் தாமதமானது.

விமானம் புறப்படத் தாமதமாவது குறித்து துணை விமானி ஒருவர், அங்கிருந்த பயணிகளிடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதில், ஆத்திரமடைந்த பயணிகளில் ஒருவர், துணை விமானி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதைப் பார்த்து சக பயணிகளும், விமானப் பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை, அங்கிருந்த மற்றொரு பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் போலீசுக்கு புகாரளித்தனர். விசாரணையில், தாக்குதல் நடத்திய அந்த பயணி, சஹில் கதாரியா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சஹில் கதாரியாவை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.