மும்பை, கோல்ஹாபூர் இடையே சேவையில் உள்ள மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 700 பயணிகளுடன் பத்லாப்பூர் மற்றும் வாங்கனிக்கு இடையே இன்று காலை வெள்ளத்தில் சிக்கியது.

Advertisment

passengers rescued safely from mahalaxmi express in mumbai

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 700 பயணிகளை ஏற்றி சென்ற இந்த ரயில் பாதி வழியில் பழுதாகி வெள்ளத்திற்குள் சிக்கியது. இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளே சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

Advertisment

இதனையடுத்து ரயில் சிக்கியிருந்த பகுதிக்கு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் நகர போலீசார்விரைந்து சென்று மீட்புப்பணியை மேற்கொண்டனர். காலை முதல் 15 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு, வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி விரைவு ரயிலில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சாதுரியமாக செயல்பட்டு பொதுமக்களை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.