Skip to main content

முன்கூட்டியே வருகிறதா நாடாளுமன்றத் தேர்தல்?

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Is the parliamentary election coming early?

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. 

 

இந்த  நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பாசறை சார்பில் நேற்று முன் தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நம்முடைய தேசத்தை பா.ஜ.க சமூகங்களுக்கிடையில் பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நமது நாட்டை வெறுப்புணர்வு நிறைந்த தேசமாக மாற்றிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

வேறு எந்த கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் நாட்டில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர்களையும் பா.ஜ.க. தற்போதே முன் பதிவு செய்து வைத்துள்ளனர். எனவே, அந்த கட்சி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளதாகத் தெளிவாகத் தெரிகிறது. அதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக என்னுடைய கணிப்பாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதிஷ்குமாரிடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே கூறிவிட்டேன். எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியில் ஒன்றிணைந்ததால், அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தால் பா.ஜ.க இதுபோன்று நடத்தக்கூடும். 

 

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்தியா கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதியில் மும்பையில் நடக்க உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், எதிர்க்கட்சிகளின் அணி கூடுதல் பலமடையும். எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

 

எனக்கு என்று தனிப்பட்ட பதவி ஆசையோ, லட்சியமோ இல்லை. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க வுக்கு எதிராக அதிகமான கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. அது தொகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்துவதில் தாமதம் குறித்து மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? பா.ஜ.க தலைவர்கள் இது குறித்து வாய் திறக்க வேண்டும்.” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.