Skip to main content

நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ‘மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில், ஒருமுறை உபயோகப்படும்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்’என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற செயலாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாடாளுமன்ற வளாகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத 'பிளாஸ்டிக் பொருட்களை' ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். 

 

parliament secretary announced plastic did not used in parliament house


 

இருப்பினும், மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்காத காரணத்தினால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடை செய்ய முடியவில்லை. இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்ற செயலாளர் தனது அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.
 

அந்த அறிக்கையில், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் பொருள்களும் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சணல், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

parliament secretary announced plastic did not used in parliament house


கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்