சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதிகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தூய ஆக்சிஜன் விற்பனை நிலையம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

oxy pure showroom in delhi

Advertisment

Advertisment

'ஆக்சி ப்யூர்' என்ற பெயரிலான இந்த விற்பனை மையம் டெல்லியில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த மையத்தில், ட்யூப் வழியே பல்வேறு நறுமணங்களில் உள்ள சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். ஓய்வாக அமர்ந்து ஆக்சிஜனை சுவாசிக்க அலங்கரிக்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்திற்கு சென்று 15 நிமிடங்கள் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க பொதுமக்களிடம் கட்டணமாக ரூ.299 வசூலிக்கப்படுகிறது.

ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயாராக இருக்கும் ஆக்சிஜனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். காற்று மாசு டெல்லியில் அதிகரித்திருக்கும் இந்த சூழலில், அங்குள்ள மக்கள் சுத்தமான ஆக்சிஜனை பணம் கொடுத்து வாங்கி சுவாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.