உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். யோகி ஆதித்யாநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் முதல்தடவையாக இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என கூறியுள்ளார். இந்தசூழலில் ஒவைசி, தனது கட்சி உத்தரப்பிரதேச தேர்தலில் ஜன் அதிகார் மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
மேலும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், 2 முதல்வர்கள் இருப்பார்கள் எனவும், அதில் ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும், ஒருவர் பட்டியலினத்தவராகவும் இருப்பார்கள் எனவும் ஒவைசி அறிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர் உட்பட மூன்று பேர் துணை முதல்வர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.