/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/N282.jpg)
கேரளாவில் கனமழை பொழிந்து வரும் நிலையில் அங்கு 7 மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து தென்மேற்கு பருவமழையானது தொடங்கியது. முன்னதாக முதல் இரண்டு வாரங்களில் மழைப்பொழிவு லேசாக இருந்த நிலையில் தற்போது பருவமழையானது தீவிரமடைந்து இருக்கிறது. வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிதீவிர கனமழை பொழியும் என்பதால் கேரளாவின் இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக குட்டிகானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த வெள்ள கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்போர் இரவு பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேரள அரசு எச்சரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)