Skip to main content

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Ghulam Nabi Azad

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.

 

இந்தநிலையில் நாளை குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நாங்கள் 16 அரசியல் கட்சிகளிடமிருந்து அறிக்கையை வழங்குகிறோம். நாங்கள் நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றப்போகும் உரையைப் புறக்கணிக்கிறோம். இந்த முடிவிற்கான முக்கிய காரணம் வேளாண் மசோதாக்கள், எதிர்க்கட்சிகள் இல்லாமல், பலவந்தமாக நிறைவேற்றப்பட்டதுதான்" எனக் கூறியுள்ளார்.

 

"ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடினர். தொடர்ந்து போராடுவார்கள். அதனால்தான் ஆம் ஆத்மி குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்கும். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாங்கள் தொடர்ந்து கோருகிறோம். வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மரணத்திற்கான ஆணையில் போடப்பட்ட கையெழுத்தாகும்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்