Skip to main content

நீலகிரிக்கு நேர் எதிர்; அஸ்ஸாமில் நிகழ்ந்த இரக்கமற்ற சம்பவம்!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
 Opposite the Nilgiris; A cruel incident in Assam

தாயைப் பிரிந்த குட்டி யானை, தாயைத் தேடி அலையும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் நீலகிரியில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையுடன் காட்டு வழியில் பொடி நடை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோக்களை யாரும் மறந்திருக்க முடியாது. தாயுடன் சேர்க்கப் படாத பாடுபட்ட அந்த நிகழ்வு செய்திகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீலகிரியில் நிகழ்ந்திருந்த சம்பவத்திற்கு நேர் எதிராக நடந்தது தான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

காரணம் தாய் யானையைப் பிரிந்த யானை குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடிக்கும் அந்தக் காட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி தேயிலைத் தோட்டத்தில் தாய் யானையைப் பிரிந்த குட்டி யானை தோட்டத்திற்குள் வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், அதன் நிலையைப் புரிந்து கொள்ளாமல் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அதை மிகவும் மூர்க்கத்தனமாக சத்தமிட்டு விரட்டினர். கற்களைக் கொண்டு தாக்கியதால் அந்தக் குட்டி யானை தலைதெறிக்க சத்தமிட்டுக்கொண்டே ஓடியது.  யானை குட்டி ஒன்று அம்மாவைத் தேடி அலைவதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர் ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு 'குட்டி யானையின் உணர்வை புரிந்து கொள்ளாத மக்கள்' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் 'அம்மாவை தேடி அலையும் பரிதாப நேரத்தில் கூட அதனைக் கடுமையாக விரட்டியடித்தனர். மனிதன் பூமியின் மிகக் கொடூரமான உயிரினம்' எனத் தன்னுடைய பதிவில் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

'மனிதர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது' எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வீட்டில் தூங்கிய தொழிலாளியை மிதித்து கொன்ற யானை - சத்தியமங்கலத்தில் பயங்கரம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
An elephant trampled a sleeping laborer to death at Sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஊருக்குள் புகுந்து தொழிலாளியை மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மணல்மேடு அருகே உள்ள தூரம் மொக்கை என்ற கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (44). ஆடு மேய்த்தல் மற்றும் மீன் பிடித்தல் தொழில் செய்து வந்தார். இவர் தனது தாய் தந்தையுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கனகராஜ் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தாய், தந்தையுடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தூரம் மொக்கை கிராமத்துக்குள் புகுந்து வந்தது. அப்போது கனகராஜ் குடிசை வீட்டுக்குள் நுழைந்த யானை அங்கு தூங்கிக் கொண்டிருந்த கனகராஜ் நெஞ்சுப் பகுதியில் ஓங்கி மதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு கனகராஜ் தாய், தந்தை திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது தங்களது மகனை யானை மிதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த யானை குடிசை விட்டு வெளியேறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதனால் கனகராஜன் தாய், தந்தை அதிர்ஷ்டவசமாக தப்பினர். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

நள்ளிரவில் இறங்கிய கொம்பன்; பெற்றோரின் கண்முன்னே பிரிந்த மகனின் உயிர்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
elephant trampled a laborer to passed away near Sathyamangalam
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஊருக்குள் புகுந்து தொழிலாளியை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மணல்மேடு அருகே உள்ள தூரம் மொக்கை என்ற கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (44). ஆடு மேய்த்தல் மற்றும் மீன்பிடித்தல் தொழில் செய்து வந்தார். இவர் தனது தாய் தந்தையுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கனகராஜ் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தாய், தந்தையுடன் குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தூரம் மொக்கை கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது கனகராஜ் குடிசை வீட்டுக்குள் நுழைந்த யானை அங்கு தூங்கிக் கொண்டிருந்த கனகராஜ் நெஞ்சுப் பகுதியில் ஓங்கி மதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு கனகராஜ் தாய், தந்தை திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது தங்களது மகனை யானை மிதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை எடுத்து அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த யானை குடிசை விட்டு வெளியேறி அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனால் கனகராஜன் தாய், தந்தை அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

யானை மிதித்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.