Skip to main content

'தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி' - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

 'Vaccination is allowed only' - Tirupati Devasthanam Announcement!

 

கரோனாவிற்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்ற முனைப்புடன் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துவருகிறது.

 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனில் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல், தரிசனத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை சமர்ப்பித்துவிட்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்