Published on 15/06/2021 | Edited on 15/06/2021
கடந்த வருடம் இதேநாளில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்ப்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.
இந்தநிலையில், இருபது வீரர்கள் வீரமரணமடைந்த முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, அந்த வீரர்களுக்கு இந்திய இராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. லே-வில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில், எல்லையைப் பாதுகாக்கும் இராணுவப் படைப்பிரிவான 'நெருப்பு மற்றும் சீற்றம்' படைப்பிரிவினர் வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவியும், போர் நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்தும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.