Skip to main content

“ஒரு நாடு; ஒரு மதம்...” - பா.ஜ.க.வை விமர்சித்த தேஜஸ்வி யாதவ்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

"One Nation One Religion..." - Tejashwi Yadav Criticizes BJP

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. 

 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

ஒன்றிய அரசின் இந்த ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பீஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மக்களுக்கு வலுவான ஒன்று தேவை. அதனைத் தான் நாங்கள் (இந்தியா) தயார் செய்து வருகிறோம். தற்போது ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளோம்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதற்கு முன்பாக அவர்கள், ஒரு நாடு ஒரு வருமானம் எனும் திட்டத்தை கொண்டுவரவேண்டும். முதலில் மக்களுக்கான நிதி நியாயத்தை உருவாக்க வேண்டும். ஒட்டுமொத்த நாட்டையும் கட்டுப்படுத்த பா.ஜ.க. முனைப்புக் காட்டுகிறது. அதன்பிறகு ஒரு நாடு ஒரு தலைவர்; ஒரு நாடு ஒரு கட்சி என்று சொல்வார்கள். அவர்களின் இந்தப் பயணம் ஒரு நாடு ஒரு மதம் எனும் வழியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனும் சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் அரசியல் செய்கின்றனர்” - ஆர்.எஸ். பாரதி பதிலடி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். 

RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார். கள்ளச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அரசியல் கட்சியினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவம் எதிர்பாராத ஒன்று என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் விவாதிக்க தயாராக இல்லை. இந்த சம்பவத்தில் நிகழும் உயிரிழப்புகளை திட்டமிட்டு அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 

RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. உண்மையை புரிந்துகொள்ளாமல் மத்திய நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். வரலாறை முழுமையாக புரிந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச வேண்டும். கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து வந்துள்ளதால் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்?. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறைக்கு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை இழிவுப்படுத்தியுள்ள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பாஜகவினர் பெரிதுப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.