இயக்குனர் ஒமர் லுலு இயக்கத்தில் இளம் பட்டாளங்கள் களமிறங்கியிருக்கும் படம் ஒரு அடார் லவ். இந்தப் படத்தி இடம்பெற்றிருக்கும் மாணிக்ய மலராயி பூவி என்ற பாடல் அதிக வரவேற்பையும், சில எதிர்ப்பையும் சந்தித்தது. இந்தப் பாடலில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் சிமிட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டன.

Advertisment

Priya

இதெல்லாம் ஒரு புறமிருக்க, இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்துவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐதராபாத்தில் இந்தப் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மீது புகாரளிக்கப்பட்டு, அது வழக்காக பதியப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஜின்சி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில், இந்தப் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மற்றும் நாயகி பிரியா வாரியர் மீது புகாரளித்துள்ளது ஜன்ஜக்ரான் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகாரளித்துள்ளனர்.

‘இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான பாடலை உருவாக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்காக தனிப்பட்ட மத நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 295ன் கீழ் வழக்குப்பதிய கோரியுள்ளோம்’ என ஜன்ஜக்ரான் சமிதி அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுவரை இந்த புகாரை ஏற்று எந்த வழக்கும் பதியவில்லை என ஜின்சி காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.