Published on 01/02/2021 | Edited on 01/02/2021

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடோன் இடிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்மாநிலத்தில் தானே மாவட்டத்தில் பிவண்டி பகுதியில் பெரிய குடோன் ஒன்று அமைந்துள்ளது. இதில் விவசாயப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த குடோன் எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 7 பேர் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 5 பேரை பலத்த காயத்துடன் மீட்டனர். ஒருவர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.