'பணம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டும்' என்று சொல்வார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு அக்கவுண்ட்டை பிச்சிக்கிட்டு கொட்டியுள்ளது பணம். ஆனால் அதை அவர் பயன்படுத்த முடியாது என்பது தான் சோகம்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நசீருல்லா மண்டல். நசீருல்லா மண்டல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு ஒன்று வைத்திருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் ஒரே நாள் இரவில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனது.
100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனது குறித்து சைபர் செல் காவல்துறை அவருக்கு அனுப்பிய அறிக்கையை வைத்தே அவர் இதனைத் தெரிந்து கொண்டார். எப்படி அவருடைய வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவருடைய வங்கிக் கணக்கானது தற்பொழுது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.