
கரோனா வைரஸ் தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து அதன் பாதிப்பை பல வடிவங்களில் ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுக்க பெரும்பாலும் கரோனா தாக்கம் என்பது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து முடுக்கி விடப்பட்டுள்ளதால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட சில நாடுகளில் அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது எனவும் நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், உருமாறிய கரோனாவான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. தேவைக்கு ஏற்ப மருத்துவ உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.