கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 10ம் தேதி அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கும் டெல்லியில் கடந்த வாரமே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளா விடுமுறையை அளித்திருந்த நிலையில், தற்போது மேற்குவங்க அரசும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் வரும் 31ம் தேதி வரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.