Skip to main content

வாரிசால் பயனில்லை; துணிவான முடிவை எடுத்த முதியவர் - அதிர்ந்துபோன அரசு

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

old man has written off property worth Rs 1.5 crore to the government

 

உத்தரப்பிரதேசத்தில் பெற்ற பிள்ளைகள் தன்னைக் கைவிட்டதாகக் கூறி தன்னுடைய ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை அரசுக்கு எழுதி வைத்த முதியவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாதுசிங். இவருக்கு நான்கு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் நான்கு பேருக்கும் திருமணமாகி, அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மகனுக்கு இன்னும் திருமணமாகாத சூழலில் சகரான்பூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாதுசிங் மனைவி இறந்ததைத் தொடர்ந்து அவர் மட்டும் முசாஃபர்நகரில் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், நாதுசிங்கின் பிள்ளைகள் அவரை முசாஃபர்நகர் வீட்டிலிருந்து முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். ஐந்து பிள்ளைகள் இருந்தும் ஒருவர் கூட தன்னைப் பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்ததால் மனமுடைந்த நாதுசிங் தனது பெயரில் உள்ள ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை உத்தரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த உயிலில், தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசு மருத்துவமனை அல்லது பள்ளிக்கூடம் கட்டிக்கொள்ளலாம் என்றும், எனது மரணத்திற்குப் பிறகு எனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாகக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து நாதுசிங் விருப்பப்படியே அவரது இடத்தில் பள்ளி அல்லது மருத்துவமனை கட்டப்படும் என்றும், அதற்காக அவரது மரணத்திற்குப் பிறகு அரசு நிலத்தை எடுத்துக்கொள்ளும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்