ஒடிசா மாநிலத்தில் கடந்த வாரம் தாக்கிய ஃபானி புயலால் சுமார் 15 மாவட்டங்ககளில் உள்ள வீடுகள் மிகுந்த சேதம் அடைந்ததாகவும் , இதில் பூரி மாவட்டத்தில் அதிக அளவில் வீடுகள் சேதமாகியுள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் முகாம்களில் இருப்பதாகவும் , படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்த பட்நாயக் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (PMAYs)சுமார் 5 லட்சம் சிறப்பு வீடுகளை கட்டித் தரவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு பங்குடன் ஒடிசா மாநில அரசின் நிதி உதவியுடன் வீடுகளை கட்டித்தர என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் ஒடிசா மாநிலத்திற்கு விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒடிசாவில் அம்மாநில முதல்வர் பட்நாயக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால் உயிரிழப்புகள் குறைந்தது என அனைத்து மாநில முதல்வர்களும் ஒடிசா முதல்வரை பாராட்டினர்.
அதே போல் பிரதமர் நரேந்திர மோடியும் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து ஒடிசா முதல்வர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாராட்டினார். இந்நிலையில் புயல் கடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில் அந்த மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. ஒடிஷா மாநிலத்திற்கு தமிழக அரசு 10 கோடியும் , ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஒடிசா மாநிலத்தின் மறுக்கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 10 கோடியை வழங்கினார். மற்ற மாநில முதல்வர்கள் , தொழிலதிபர்கள், இந்திய மக்கள் உட்பட அனைவரும் ஒடிசா மாநில மக்களுக்கு உதவி வருகின்றனர்.