கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் மட்டும் (02/06/2020) தமிழகத்தில் 11,094 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (03/06/2020) காலை 09.00 மணிவரை நாடு முழுவதும் சுமார் 41,03,233 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,37,158 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.