Published on 17/02/2021 | Edited on 17/02/2021
தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கிரண்பேடி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன். புதுச்சேரி மாநிலத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அது தற்போது மக்கள் கையில் உள்ளது. தனக்குத் துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.