no need for doctor recommendation for corona test

இனி மருத்துவர் பரிந்துரை இல்லாமலே கரோனா பரிசோதனை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (05/09/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,748- லிருந்து 40,23,179 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68,472- லிருந்து 69,561 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30.37- லட்சத்திலிருந்து 31.07 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இனி மருத்துவர் பரிந்துரை இல்லாமலே, பொதுமக்கள் கரோனா பரிசோதனை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருப்பமுள்ளவர்கள், வெளியூர்களுக்குப் பயணிப்பவர்கள் எனத் தேவைப்படுபவர்கள் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment