Skip to main content

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

nivar cyclone puducherry government imposed 144

 

 

'நிவர்' புயல் நாளை கரையைக் கடப்பதால், புதுச்சேரியில் மூன்று நாள் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 

 

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிவர்' புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை மாலை கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட சில மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்றிரவு 09.00 மணி முதல் வரும் நவம்பர் 26- ஆம் தேதி காலை 06.00 மணி வரை மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் வரை புதுச்சேரியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தபப்ட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்