Skip to main content

ஏலம் விடப்படும் நீரவ் மோடியின் பொருட்கள்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறினர்.

 

nirav

 

இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவரும் அவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து லண்டனில் வைத்து நிரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நிரவ் மோடியின் 173 ஓவியங்களை விற்பனை செய்யவும், அவரது 11 கார்களை ஏலம் விடவும் நீதிமன்றத்திடம் அமலாக்க துறை அனுமதி கோரியிருந்தது. இதற்கு நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. எனவே கூடிய விரைவில் நீரவ் மோடியின் இந்த பொருட்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்