N.I.A. raid  Central Home Minister Amit Shah advice!

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி முகாம் நடத்துதல், தடை செய்த அமைப்புகளில் ஆட்களைச் சேர்த்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (22/09/2022) அதிகாலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தமிழகத்தின் கோவை, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நாட்டின் 10- க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையுடன் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100- க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறைச் செயலாளர், தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.