Skip to main content

விபரீத செல்ஃபியால் உயிரிழந்த புதுமண தம்பதி; காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த சோகம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Newly wed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அண்மையில் கர்நாடகாவில் அருவி ஒன்றில் ரீல்ஸ் வீடியோவிற்கு மாசாக போஸ் கொடுத்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கால் இடறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இதேபோல கேரள மாநிலத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக். இவருக்கும் நவுபியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அன்சில் என்ற உறவினரின் வீட்டிற்கு இருவரும் விருந்துக்காக சென்றுள்ளனர். இருவரும் விருந்தை முடித்துவிட்டு மாலையில் அங்கே ஏதேனும் இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

 

 Newlywed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அன்சில் குடும்பத்தினரும் உடன் துணையாக சென்றுள்ளனர். அப்பொழுது ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்த தம்பதிகள் இருவரும் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அதற்காக முயன்ற பொழுது இருவரும் தடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இருவரையும் காப்பாற்ற உறவினர் அன்சிலும்ல் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலைத் தேடினர். இறுதியாக மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. செல்ஃபி எடுக்க முயன்று தம்பதி மட்டுமில்லாது, அவரைக் காப்பாற்றச் சென்ற உறவினரும் உயிரிழந்த சம்பவம் அங்கு  சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறு; போலீசார் குவிப்பு

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Dispute caused by Digital Banner; Police build up

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறில் கோவில் பண்டிகை கலவரக்காடான சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி அம்பேத்கர் நகரில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பன்னிரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த டிஜிட்டல் பேனரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது.

இதில் இரண்டு தரப்பு மோதி கொண்ட நிலையில் நான்கு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

8 வயது சிறுமியை இழுத்துச் சென்று சிறுவர்கள் செய்த கொடூரம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
 8-year-old girl incident at andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், நந்தியால மாவட்டம் முச்சுமரி பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், காலையில் வெளியே விளையாட சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காததால், அவர்கள் முச்சுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், மோப்பநாய் உதவியோடு போலீசார் தேடி வந்தனர். அதில் மோப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளது. 

அந்தச் சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. அதில், சிறுவர்களில் 2 பேர் 6ஆம் வகுப்பும், ஒருவன் 7ஆம் வகுப்பும், காணாமல் போன சிறுமி படித்த பள்ளியில் தான் படித்துள்ளார்கள். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஒதுக்குபுற இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்ற பயத்தில் சிறுமியை கொன்று அருகில் உள்ள கால்வாயில் உடலை வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 8 வயது சிறுமியை, சிறுவர்கள் மூவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.