Skip to main content

புதிய கல்விக்கொள்கை: கல்வி அமைச்சர் இன்று ஆலோசனை!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

 

NEW EDUCATION POLICY UNION EDUCATION MINISTER DISCUSSION FOR TODAY

 

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய கல்விக்கொள்கை முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். எனினும், ஒருசிலர் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அதேபோல், மாநில மொழிகளில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், கல்வியாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்துவருகிறது.

 

அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக 45 மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (03/09/2021) ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் ஆலோசனையில் பங்கேற்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“இந்தியா கூட்டணி பாஜகவிற்கு சவாலாக இருக்கும்” - மத்திய அமைச்சர் 

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

India alliance will challenge BJP says Union Minister dharmendra pradhan

 

அடுத்தாண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள கூட்டணியை உருவாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டணியினர் பீகார், பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். 

 

அதேபோல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் வெளியேறியுள்ளனர்.  இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த ஒரு தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. பிரதமர் மோடி கட்சியை நன்றாக வழிநடத்தி செல்கிறார். பாஜக கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாஜக செயல்பட்டு வருகிறது” என்றார்.