new education policy

Advertisment

இந்திய அரசு, நாட்டில் கல்வியைமேம்படுத்துவதாகபுதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

அசாமி, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் 17 மொழிகளில்புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அவ்வப்போது பிரதமர் மோடி புகழ்ந்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad