மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ் ராஜ்குமார் சோனி(28). பட்டயக் கணக்காளரான இவர், பொறியியல் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், காதலர்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
தரம்பேத் பகுதியில், அவர்கள் காரை ஓட்டிச் சென்றபோது, சூரஜ் ராஜ்குமாரின் காதலி ஓட்டுநர் சீட்டில் ஏறி ஆபாசமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற ஒருவர், அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, இந்த விஷயத்தை போலீசார் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, காரின் எண்ணைக் கொண்டு உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சூரஜ் ராஜ்குமார் சோனி மற்றும் அவரது காதலி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு, பொது இடத்தில் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.