Published on 13/04/2021 | Edited on 13/04/2021
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/cJRVwRAo69qvYXADS1ZzM5wC29BoYxfJU5yVPzLNoFk/1618311712/sites/default/files/inline-images/369_9.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 879 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து 97,168 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.