பெரு நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தற்காலிகமாகத் தடை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் தொழில்துறை முற்றிலும் முடங்கியிருந்த சூழலில், தற்போதைய ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகே சற்று இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட இழப்பு என்பது சிறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்து தொழில் நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இந்தச் சூழலில், நஷ்டமடைந்த பெருநிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தற்காலிகமாகத் தடை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, பெரு நிறுவனங்களின் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்கிறது.